சிங்கப்பூரில் செல்ல பிராணியாக அறிமுகப்படுத்தப்பட்ட பறவை!

பெரும்பாலும் மாலை நேரங்களில் Choa Chu Kang பகுதியில் உள்ள மரங்களில் இலைகளுக்கு பதிலாக 70-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். இது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.

இந்த red-breasted கிளிகள் 1940 இல் சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளாக அறிமுகப்படுத்தப்பட்டன என்று National Parks Board கூறியது.

கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம் அவை விடுவிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தப்பித்திருக்கலாம் என வல்லுநர்கள் கூறினர்.

2011 ஆம் ஆண்டில் இவற்றின் எண்ணிக்கை 329 ஆக இருந்தது. ஆனால் தற்போது இவற்றின் எண்ணிக்கை 800க்கும் அதிகமாக இருக்கிறது.

Choa Chu Kang பகுதியில் மட்டும் 700 red-breasted கிளிகள் கணக்கிடப்பட்டுள்ளன.சிங்கப்பூரின் காலநிலையே இவற்றின் பெருக்கத்திற்கு காரணம்.

Choa Chu Kang பகுதி காடுகளுக்கு பக்கத்தில் இருப்பதால் கிளிகள் அங்கே அதிகம் காணப்படுகின்றன. அவைகளுக்கு தேவையான உணவும், கூடுகட்ட இடமும் அங்கே கிடைக்கின்றது.

இந்த red-breasted கிளிகள் அங்குள்ள மற்ற பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், அவை உணவுக்காக வீடுகளுக்குள் நுழைவதில்லை.

இருப்பினும் இவற்றின் எண்ணிக்கை சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்க கூடும் என்று National Parks Board கூறியது.