இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை அடுத்து தலைநகரான பாரிஸில் நடைபெற்ற தேசிய தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், நம் நாட்டு பிரதமருக்கு அதிபர் இம்மானுவேல் சிறப்பு பட்டத்தினையும் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அன்றிரவு பிரதமர் மோடி அவர்களுக்கு லூவர் அருங்காட்சியகத்தில் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமல்லாமல், பிரபல திரைப்பட நடிகர் மாதவன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் இம்மானுவேல் மேக்ரன், நடிகர் மாதவன் மற்றும், நரேந்திர மோடி அவர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படமானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
இது குறித்து நடிகர் மாதவன் கீழ்க்கண்ட தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பாரிசில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில், அதிபர் மேக்ரோனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவினை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நேர்மறையான மற்றும் பரஸ்பர அன்புடன் பிரான்ஸ் நாட்டில் எங்களுக்கு வருகை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாடு உறவுகளும், மென்மேலும் வளர நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மேலும் அதிபர் மேக்ரன் எங்களுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்தார். அவரின் பெருந்தன்மை மற்றும் தனித்துவம் என்னை மிகவும் வியப்படைய வைத்தது. அவரின் பரந்த மனதை பறைசாற்றுவதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். எனவே பிரான்சும், இந்தியாவும் இணைந்து வளரட்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.