தமிழகத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர்தான் அனிதா சம்பத். பிக் பாஸ் ஷோ வில் இவரது திறமையான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். மேலும் தனது சொந்த வாழ்க்கையில், மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருப்பதை அவர் எடுத்துக் கூறினார்.
இந்நிலையில், காதல் திருமணம் செய்து தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகின்றார். அவர் போடுகின்ற ரீல்சை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இன்ஸ்டாகிராம் மற்றும் youtube களில் இவரது ரீல்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம்.
சிறிது நாட்களுக்கு முன்பு, தனது கணவருடன் புது வீட்டில் குடியேறியதை தனது youtube சேனலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருப்பது போலவும், ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருப்பது போலவும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு கீழே அவருடைய கணவர் ” எல்லாம் சரியாகிவிடும் பப்பு” என்று கமெண்ட் செய்துள்ளார்.
தற்பொழுது விஜய் டிவியில் நடைபெற்று வரும் ‘தமிழ் பேச்சு.. எங்கள் உயிர் மூச்சு..’ என்ற நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளரின் ஒருவராக பங்கேற்று வரும் நிலையில், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவர் விரைவாக குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.