ஜூலை 17-ஆம் தேதி (இன்று) முதல் செப்டம்பர் 30 வரை ART எனும் Antigen Rapid Test பரிசோதனை கருவிகளை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் மொத்தம் 6 ART கிட்களைப் பெற உள்ளார்கள்.
அவைகள் தேசிய அத்தியாவசிய பொருட்களிலிருந்து எடுக்கப்படுகிறது.
தற்போது வழங்கப்படும் ART கருவிகள் 2024-ஆம் ஆண்டு முதல் பாதியில் காலாவதி ஆகிவிடும் என்று MOH நேற்று (ஜூலை 16) தெரிவித்தது.
அவைகளை சுமார் 6 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். கையிருப்பில் உள்ள கருவிகளைப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று MOH கூறியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 12 கிட்கள் வழங்கப்பட்டது.
தற்போது விநியோகிக்கப்படும் ART கிட்கள் ஐந்தாவது தேசிய விநியோகம் என்று குறிப்பிட்டது.