ஜூலை 13-ஆம் தேதி மதியவேளையில் புக்கிட் பஞ்சாங் ரிங் ரோட்டில் எதிரே உள்ள புல்வெளியில் 33 வயதுடைய நபர் உடல் அசைவின்றி கிடந்துள்ளார்.
அவர் இறந்து கிடைப்பதை எதிர் பிளாக்கில் வசிக்கும் ஒருவர் கண்டதும், உடனடியாக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதாக கூறினார்.
சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை விரைந்தன. மருத்துவ உதவியாளர் அவரை பரிசோதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதையும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.