சிங்கப்பூரில் மற்றுமொரு வேலையிடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.சாங்கி விமான நிலையத்தில் டெர்மினல் 5 மற்றும் கூடுதல் ஓடுபாதைகளுக்கான பணிகள் நடைபெற்று வந்தன.
வழக்கம்போல் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது கனரக வாகனத்தில் உள்ள செயலிழந்த பாகம் ஒன்று 30 வயதுடைய இந்திய ஊழியர் மீது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அவர் அதனை இயக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் சுமார் மாலை 4.45 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
அவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாங்கி விமான நிலையத்தில் இதற்குமுன் விபத்து ஏற்பட்டுள்ளது. அது 2021-ஆம் ஆண்டு நடந்தது.43 வயதுடைய இந்திய ஊழியர் பலியாகினார்.
இச்சம்பவம் குறித்து MOM விசாரணை நடத்தி வருகிறது.
அதோடு அங்கு, நடைபெற்று வந்த அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தவும் அறிவுறுத்திருந்தது.