சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய விதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சாலைகளில் சைக்கிள் ஓட்டும் குழுக்களின் வரம்பு அளவு விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய விதி அறிமுகமானதிலிருந்து தற்போது முதல்முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஜூன் 24 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை நடத்திய அமலாக்க சோதனையில் இருபத்தி ஆறு சைக்கிள் ஓட்டுநர்கள் பிடிபட்டதாக இன்று (ஜூலை 14) காவல்துறை மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதியை பின்பற்றாமல் ஓட்டியதற்காக இருபத்தி ஆறு சைக்கிள் ஓட்டுநர்களுக்கு $150 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் சாலைகளில் உள்ள ஒற்றையடி பாதைகளிலும், பேருந்து பாதைகளிலும் சைக்கிள் ஓட்டுபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் ஒரே கோப்பாக பயணம் செய்ய வேண்டும். ஐந்து சைக்கிள்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகளில் இரண்டு பக்கமாக ஓட்டலாம்.
சைக்கிள் ஓட்டுபவர்கள் அவர்களுக்கான விதியை மீறினால் $150 அபராதம் விதிக்கப்படும்.
சைக்கிள் ஓட்டுபவர்கள் 30மீ இடைவெளியில் ஓட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
“ விதிகளைப் பின்பற்றாமல் தவறாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக TP அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க தயங்காது என்றும், மேலும் நடவடிக்கைகள் தொடரும்´´ என்றும் காவல்துறை மற்றும் LTA அதிகாரிகள் தெரிவித்தனர்.
சைக்கிள் ஓட்டும் குழு அளவுகளின் வரம்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினர்.
சிங்கப்பூரில் சாலைகளில் இட நெரிசல் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு சைக்கிள் ஓட்டும் குழு அளவுகளின் வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் சைக்கிள் ஓட்டும் குழு அளவுகளின் வரம்பு விதியை மீறுவோருக்கான அபராதம் $150 ஆக உயர்த்தப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை என்று மே மாதம் காவல்துறை கூறியிருந்தது.