சிங்கப்பூரில் அடுத்த ஆண்டிலிருந்து புதிய நடைமுறை வர உள்ளது.அடுத்த 2025-ஆம் ஆண்டு முதல் சனிக்கிழமைகளில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் செயல்பட வேண்டிய கட்டாயமில்லை என்று சமுதாய மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகால குழந்தை பராமரிப்பு கல்வியாளர்களின் பணிச்சூழலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த முடிவு எடுப்பதற்கு இன்னும் அதிகபடியான கல்வியாளர்களை துறைக்கு கவர்ந்திழுக்க எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிகாட்டியது.
சனிக்கிழமைகளில் குழந்தை பராமரிப்பு மையங்களின் சேவைகளுக்கு தேவை இல்லை என்றால் அவை படிப்படியாக தங்கள் சேவையை நிறுத்தலாம்.
அடுத்த ஆண்டிலிருந்து அந்த முறையை செயல்படுத்தலாம்
நிறைய மையங்களை நடத்தும் நிறுவனங்கள் சனிக்கிழமைகளில் எந்தெந்த மையங்களை செயல்படுத்தலாம் என்பதை முடிவெடுத்துக்கொள்ளலாம்.
2025-ஆம் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை இப்போதிலிருந்து பெற்றோர்,ஆசிரியர்கள்,நிலையங்கள் தயாராகி கொள்ளலாம்.
ஊழியர்களுக்கு முதலாளிகள் ஆதரவு அளிக்கும்மாறு அமைச்சர் கூறினார்.
தற்போது சுமார் 24,000 பேர் குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ளனர்.
இன்னும் கூடுதலாக 2,500 ஊழியர்களைச் சேர்ப்பதே நோக்கம்.
ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த,பெரிய பிள்ளைகளுக்கான குழந்தை பராமரிப்பு மையங்களை உருவாக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.