கிரிக்கெட் வீரர் டோனியும், அவரது மனைவியும் முதல் முதலாக தயாரிக்கும் எல் ஜி எம் என்ற படத்தின் டிரைலரானது நேற்று வெளியாகி டிரண்டாகி வருகின்றது.
தோனியும், அவரது மனைவியும் இணைந்து டோனி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எல் ஜி எம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்ற திரைப்படத்தை முதல் முதலாக தமிழில் தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டில் தோனிக்கு என்று பெருமளவு ரசிகர் பட்டாளம் உள்ளதால், தனது முதல் முயற்சியை தமிழ்நாட்டில் களம் இறக்கி இருக்கின்றார் டோனி.
தமிழ்நாட்டினரால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனி, நேற்று படத்தின் டிரைலர் வெளியீட்டுக்காக தன் மனைவியுடன் சென்னை வந்தார். நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் தோனியும் அவரது மனைவியும் இணைந்து வெளியிட்டனர்.
நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, டிடிவி கணேஷ் அவியோ நடித்த இப்படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். காதல் கதை அம்சம் கொண்ட வித்தியாசமான கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று டிரைலரை பார்க்கும் பொழுதே அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் நகைச்சுவையும், காதலும் கலந்த வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரிடமும் எதிர்பார்ப்பினை உருவாக்கி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக தமிழகம் காத்துக் கொண்டிருக்கின்றது. தோனி தயாரிக்கும் படம் என்றால் தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு இல்லாமலா போகும்…