வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவரா? நீங்கள்? இப்பதிவு உங்களுக்கு தான்!!

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவரா? நீங்கள்? இப்பதிவு உங்களுக்கு தான்!!
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல நீங்கள் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
▫ வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமா?
ஒரு சிலர் ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.அதில் வாங்கும் சம்பளத்தை வைத்து வாழ்க்கை செலவினங்களை சமாளிக்க முடியவில்லை என்று வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகின்றனர்.நீங்கள் வெளிநாட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் அந்த வேலை நிரந்தரம் கிடையாது.குறிப்பிட்ட வருடம் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்ய முடியும்.மீண்டும் நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி விடுவீர்கள்.நீங்கள் நல்ல வேலையில் இருந்தால் அதே வேலையில் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்றால் வெளிநாட்டிற்கு செல்லாமல் அதே வேலையில் இருப்பது நல்லது.நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால் நன்கு சிந்தித்து செயல்படுங்கள்.
▫ சரியான முறையில் டாக்குமெண்ட்களை தயார் செய்ய வேண்டும் :
* Resume
* Educational certificate
* RMI certificate,Singapore Driving Licenses (if)
* Passport copy
* Fully vaccination international Certificate
* Passport size photo with white background
* Full size photo with white background
அனைத்து டாக்குமெண்ட்களையும் சரியான முறையில் நெட் சென்டரில் ஸ்கேன் செய்து pdf ஆக தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்தால் உங்கள் டாக்குமெண்ட்கள் ரிஜெக்ட்டாகவும் வாய்ப்புள்ளது.
▫ ஏஜென்ட் :
இது மிகவும் முக்கியம்.அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியை தேர்ந்தெடுங்கள். நீங்கள் யார் மூலமாக செல்ல உள்ளீர்களோ அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போது அனைத்து வேலைகளுக்கும் முன்பணமாக 10000 முதல் 50000 வரை வாங்குகிறார்கள்.அதிகமான தொகையை கேட்டால் குறைவான தொகையையே கட்டுங்கள்.வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் போது உங்களுக்கு ஏற்ற வேலையா,உங்களிடம் அனுபவம் இருந்தால் அதே வேலை கிடைத்தால் அந்த வேலைக்கு முயற்சி செய்வது நல்லது. நீங்கள் எப்படியாவது வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தெரியாத வேலையை தெரியும் என்று கூறி விடாதீர்கள். நீங்கள் அங்கு சென்ற பின் உங்களுக்கு அந்த வேலை தெரியவில்லை என்பது தெரிய வந்தால் உங்களை மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளது. உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்குதா என்பதை முயற்சி செய்யுங்கள். அது கிடைக்காதபட்சத்தில் வேறு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.நீங்கள் பொறுமையாக முயற்சித்தால் உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
▫ இன்டெர்வியூ :
அனைத்து வேலைகளுக்கும் கம்பெனியில் இருந்து நேரடியாக இன்டெர்வியூ நடைபெறும்.ஒரு வேலைகளுக்கு மட்டும் நேரடியாக அப்ளை செய்கிறார்கள். இன்டெர்வியூவில் நீங்கள் கண்டிப்பாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவை ;
* சம்பளம் ( basic சம்பளம் எவ்வளவு? மாதம் எவ்வளவு சம்பளம்)
* வேலை நேரம்
* over time
* விடுமுறை எத்தனை நாள்
* சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை வேலை உண்டா
* S PASS, E PASS ,NTS பெர்மிட் ஆகிய பெர்மிட்டாக இருந்தால் Tax அவர்களே கட்டுவார்களா? இல்லை என்றால் நீங்களே கட்ட வேண்டுமா? என்பதை கேட்டுக் கொள்ளுங்கள்.
* அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளியுங்கள்.தெரிந்ததை தெரியும் என்று கூறுங்கள்.
அதிகமான பணத்தை முன்பணமாக கட்டாதீர்கள்.உங்களுக்கு அப்ளை செய்து விட்டதாக கூறினால் MOM வெப்சைட்டில் நீங்களே சரி பாருங்கள்.உங்களுக்கு approved என்று வந்துவிட்டால் டிக்கெட் கம்பெனியே எடுத்து கொடுப்பார்களா இல்லையென்றால் நீங்களே எடுக்க வேண்டுமா என்பதை முன்னதாகவே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan