ஜூலை 10-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, Skillsfuture Singapore அமைப்பு, பொருளியல் வளர்ச்சி கழகம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சுமார் 700,000 பேர் பலன் அடைய கூடிய புதிய அறிவிப்பைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தது. சிங்கப்பூரில் விநியோகத்துறையில் வேலை செய்பவர்களுக்கு புதிய பயிற்சி வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
விநியோகத்துறையில் உள்ள வேலைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய வடிவம் கொடுக்கப்பட உள்ளன.
அடுத்த ஈராண்டில் தற்போது அந்தத் துறையில் உள்ள வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு காலாவதி ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது முதல் விநியோகத் தொடரின் பல அடக்குகளில் சுமார் 700,000 பேர் பணி புரிகின்றனர்.
விநியோகத்துறையில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் பெரிய மாற்றம் ஏற்படும்.
விநியோகத்துறையில் பணிபுரிவோர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று புதிய திறன்களைப் பெற வேண்டும்.