உலகிலேயே அதிக வெப்பமான நாள் ஜூலை மாதம் பதிவானதை தொடர்ந்து, தற்பொழுது மூன்றாவது முறையாக உலகின் சராசரி வெப்பநிலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி உலகின் சராசரி வெப்பநிலையானது 17.01 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது, அது உலகின் மிகவும் வெப்பமான நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெப்பநிலையானது 16.92 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருந்தது. அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து இந்த வருடம் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஆனால் அதனை தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி17.18 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், ஜூலை ஆறாம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது. எனவே இந்த வருடம் மட்டும் மொத்தம் மூன்று தடவை உலகின் சராசரி வெப்பநிலையானது.
இந்நிலையில் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பானது 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருப்பதே பாதுகாப்பானது என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளது.
இதைப் பற்றி ஏற்கனவே லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், இந்த வெப்பநிலையானது நம் சாதனை அல்ல என்றும், உலகம் அபாய கட்டத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறி என்றும் அறிவித்திருந்தார்.
எனவே, வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டு வந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தற்பொழுது கருத்து தெரிவித்துள்ளனர்.
மரங்களை பயன்படுத்துவதும், கார்பன் டையாக்சைடு உபயோகத்தை கட்டுப்படுத்துவதும் மற்றும் காற்று மாசுபடுவதை தவிர்ப்பது மட்டுமே இதற்கு ஒரே வழி என்றும், நாம் இன்னும் மெத்தனமாக இருந்தால் நமக்கு பின்னால் வரும் தலைமுறையினர் மிகவும் துயரப்படுபவர் என்றும் எச்சரித்துள்ளனர்.