Latest Singapore News in Tamil

“உயிருக்கு உயிராக” காதலித்த பள்ளி தோழிக்கு 60 வருடம் கழித்து ப்ரபோஸ் செய்த 78 வயது முதியவர்… அமெரிக்காவில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம்

“வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும் …ஆனாலும் அன்பும் மாறாதது” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்காவில் ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

தன்னுடன் பள்ளியில் பயின்ற தோழிக்கு 60 ஆண்டுகள் கழித்து காதலை மீண்டும் ப்ரொபோஸ் செய்துள்ளார் 78 வயது முதியவர்.

பள்ளியில் எல்லோருக்கும் ஏற்படும் பருவ காதல் ஆனது அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

பெரும்பாலும் கை கூடாமலே போகும் இந்த காதலுக்கு மகத்துவம் அதிகம். ஏனென்றால் எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே இந்த காதலில் நிறைந்திருக்கும்.

அதில் பெரும்பாலான பாடல்கள் சொல்லப்படாமல் மனதிலேயே புதைக்கப்பட்டவை ஆகவே இருக்கும்.

அந்த ரகசியத்தை பொதுவாக நாம் யாருக்கும் வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே அசைபோட்டு ரசிப்பதுண்டு.

ஆனால், அதை 60 வயதில் கடந்தும் வெளிப்படுத்தி அன்பை பரிமாறி இருக்கின்றார் அமெரிக்கா முதியவர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தாமஸ் மற்றும் நான்சி.

பள்ளியில் படிக்கும் பொழுது இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் காதலை வெளிப்படுத்தாமல் இருந்த இவர்கள், பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டனர்.

மேலும் இருவரும் கல்லூரி, வேலை திருமணம் என வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிட்டன.

பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 50 ஆண்டுகள் கழித்து ஒன்று கூடும் ரியூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பள்ளி பருவ தோழர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.

அப்பொழுது அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் பத்து ஆண்டுகள் கழித்து அறுபதாவது ஆண்டை கொண்டாட பள்ளி தோழர்கள் ஒன்று கூடினர்.

இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது தன் காதலை அவரிடம் சொல்லியே தீர வேண்டும் என்று நினைத்த தாமஸ், தைரியமாக தனது காதலை அவரிடம் சொல்லி இருக்கின்றார்.

இந்நிலையில் இருவருமே குடும்பம் இன்றி தனித்தனியாக வசித்து வருவதால் ஒன்றாக இணையலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றனர்.

60 ஆண்டுகள் கழித்தும் மாறாத இந்த காதலில் தூய்மை மட்டுமே இருப்பதால் தாமஸ் ப்ரொபோஸ் செய்த படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.