மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!!

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்...!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் பலர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க, நமது உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே முடி நன்றாக வளரும். அப்படி மொட்டை தலையிலும் கூட ஓரிரு வாரங்களில் வேகமாக முடி வளரக்கூடிய உணவு வகைகளை கீழே பார்ப்போம்.

முடி வளர்ச்சி அதிகரிக்கும் உணவு வகைகள்

✨️ பாதாம் விதைகள்

✨️ பூசணி விதைகள்

✨️ ஆளி விதைகள்

✨️ வெள்ளரி விதைகள்

✨️ வால்நட்ஸ்

✨️ வேர்க்கடலை

✨️ முட்டை

✨️ மீன்

✨️ கீரை

✨️ஆட்டு கல்லீரல்

இந்த பத்து உணவுகளை சாப்பிடுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். பாதாம் விதைகளில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். ஆளி விதையை தண்ணீரில் ஜெல் ஆகும் வரை கொதிக்க வைத்து, குளிர்வித்து, தலையில் தடவி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன. கீரையில் உள்ள வைட்டமின்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன. பூசணி விதைகள், வெள்ளரி விதைகள் போன்றவற்றை ஊற வைத்து சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

புரத உணவுகளை சாப்பிடுவது முடி உதிர்தலைக் குறைக்கும். வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகளை சாப்பிடுவது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவும். கறிவேப்பிலையை பொடியாக அரைத்து சாப்பிடுவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை ஜூஸாக குடிக்கும் பொழுது முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

வைட்டமின் பி12, துத்தநாகம், செலினியம் நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும்.ஆட்டின் ஈரல் மற்றும் ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடியின் வலிமையை அதிகரிக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.