மோசடி செய்பவர்கள் பல புதுவிதமான முறையில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் விடுத்து அல்லது குறுஞ்செய்தி அனுப்பி நண்பர் அல்லது உங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும் கூறுவார்கள்.தன்னை யார் என்று கண்டுபிடியுங்கள் என்றும் சொல்வர்.
நாம் நமக்கு தெரிந்தவர்களின் பெயரைக் கூறுவோம். அவர்கள் அந்த பெயரை அடையாளமாக ஏற்றுக்கொண்டு தகவல்களை பெறுவர்.
அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டு கடன் கேட்பார்கள் அதோடு அவர்களின் வங்கி பரிவர்த்தனை செய்வதில் சிரமம் எதிர்கொள்வதாகவும் கூறுவார்கள்.
அதனால் தங்களின் உள்ளூர் வங்கி கணக்கு விவரங்களை அளிக்குமாறு கேட்பார்கள்.பணத்தை மாற்றி போடுவதற்காக அளிக்குமாறு கேட்பார்.
நண்பர் போல் ஆள்மாறாட்டம் செய்து இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் 12 மில்லியன் வெள்ளி வரை பறிபோனாதாக காவல்துறை கூறியது.
இத்தகைய மோசடிகளுக்கு குறைந்தது 3,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியது.
மற்றுமொரு நூதனமுறையிலும் மோசடி செய்து வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மோசடி செய்பவர்கள் மோசடியான இணைப்புகளை அனுப்புவதன் மூலம் பொருட்களை வாங்குவது அல்லது உணவகத்தில் முன்பதிவு செய்து தருமாறு உள்ளிட்ட சிறிய உதவிகளை கேட்கிறார்கள்.
அதனை கிளிக் செய்தவுடன் மோசடி தளத்துக்கு செல்லும். அல்லது Android Package Kit (APK) பதவிறக்கம் செய்யுமாறு கேட்கப்படும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு Password கிடைத்து விடும்.பின்னர் வங்கி கணக்கில் தேவையற்ற வங்கி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஏமாந்து விட்டதை உணர்வார்கள்.
அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அதில் நிறைய ஆபத்துகள் இருப்பதையும் காவல்துறை அறிவுறுத்தியது.