காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவில் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சுற்றுலாப்பயணிகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது.இந்த எல்லைக் கடந்து சென்றவர்கள் மே 1 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று இந்தியா அறிவித்தது.

பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு SAARC விசாவின் கீழ் அனுமதி வழங்கப்படும்.அந்த சிறப்பு விசாவை ரத்து செய்வதாக இந்தியா கூறியது.இந்தியாவில் இந்த விசா விதிகளின் கீழ் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தற்காப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறுபடுவர் என்று இந்தியா கூறியது.

இந்தியா எடுத்துள்ள இந்நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.