தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!!

ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.மேலும் பல அறியப்படாத வீரர்கள் பல நகரங்களில் கொண்டாடப்படுகிறார்கள்.
ஆனால் அப்படி கொண்டாடப்படும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஒருபோதும் சிறப்பாக எதையும் செய்ததில்லை. இந்த சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சிவம் துபே விளங்குகிறார். சிவம் துபே எப்போது அதிரடி காட்டினாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெறுகிறது.
அந்த வகையில், சிவம் துபேவை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு நிகழ்வுக்கு அழைத்துள்ளது.அங்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிஎஸ்கே வீரர் சிவம் துபே மற்றும் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது, இந்த சங்கம் விளையாட்டு வீரர்களுக்கு 30 ஆயிரம் நிதி உதவி வழங்கியது.
நிகழ்ச்சியில் பேசிய சிவம் துபே, “வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று விளையாட்டு வீரர்களுக்கு பணம் கொடுப்பதை நான் பார்த்ததில்லை. ஆனால் இது ஒரு நல்ல விஷயம்” என்றார்.
நான் அணியுடன் ஹோட்டலில் இருந்தபோது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக இந்த நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டேன்.
நீங்கள் அனைவரும் நன்றாக விளையாடி நாட்டை பெருமைப்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் உங்களை ஊக்குவிக்க, பத்து வீரர்களுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 7 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். இது உங்களுக்கு ஒரு சிறிய தொகையாகத் தோன்றலாம்.இருப்பினும், நீங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ”என்று சிவம் துபே கூறினார். சிவம் துபேயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவம் துபே விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan