புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி..???

போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பார்கள்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த வாக்கெடுப்பில் 135 கார்த்தினல்மார்கள் பங்கேற்பார்கள்.

வாக்கெடுப்பு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

போப் பிரான்சிஸ் இறந்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் அல்லது அதிகபட்சம் 20 நாட்களுக்குள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மேலும் வாக்கெடுப்பை பொருத்தவரை கர்தினல்கள் ஒன்று கூடி ஒரு நாளைக்கு நான்கு வாக்கெடுப்புகளை நடத்துவார்கள்.

காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும் மாலையில் மேலும் இரண்டு வாக்கெடுப்புகளும் நடைபெறும்.

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுபவர் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டு புகை வெளியிடப்படும்.

இதில் கரும்புகை மட்டும் தொடர்ந்து வெளியே வந்தால், வாக்குப்பதிவு முடிக்கப்படவில்லை அல்லது இன்னும் யாரும் வெற்றி பெறவில்லை என்று அர்த்தம்.

வெள்ளைப் புகை வெளியேறினால் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அர்த்தம்.

இந்நிலையில் வாத்திகன் புதிய போப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

 

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan