பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது உள்ளது.
இது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்,பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து யோசனைகளும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறியுள்ளார்.
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க சில கவர்ச்சிகரமான யோசனைகள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வோங், வேட்புமனு தாக்குதலுக்கு முந்தைய நாள் சமூக ஊடகங்களில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும் பிரச்சாரத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் இருப்பதாக பிரதமர் கூறினார்.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சூதாடப் போவதில்லை என்று அவர் கூறினார்.
தவறாகச் சிந்திக்கப்படும் செயல்கள் எதிர்கால சந்ததியினருக்கு சுமையாகி, நாட்டின் நிதியைப் பலவீனப்படுத்தும் என்று அவர் கூறினார்.
மக்களின் ஆதரவுடன், அரசாங்கம் மக்களுடன் நின்று, அவர்களுடன் பயணித்து, வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று திரு. வோங் தனது உரையில் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan