ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங் சுகாதாரத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களைப் பற்றி கேள்வி எழுப்பினார். அவர்களில் எத்தனை பேருக்கு நிரந்தரவாச தகுதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் Ong ye kung பதில் அளித்துள்ளார்.
Covid-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் அவர்களின் முக்கிய பங்கை ஆற்றியதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு செவிலியர்களுக்கு நிரந்தர வாச தகுதி கொடுக்கப்பட்டதாக கூறினார்.
ஆண்டுக்கு சராசரியாக 1,200 பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் நிரந்தரவாச தகுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 10-இல் 6 பேர் செவிலியர்கள் என்றும் கூறினார்.
மீதமுள்ளவர்கள் மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், மற்றும் மற்ற பணிகளில் பணிபுரிவோர் என்றும் கூறினார்.