குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!!

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்...!!!

குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் மேம்படுத்த பாதாம் பருப்பை கொடுக்கலாம்.அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. பாதாம் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நினைவாற்றல் பலமடங்கு அதிகரிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் இரண்டு மூன்று பாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நினைவாற்றலை அதிகரிக்க சத்தான பால்:

தேவையான பொருட்கள்:-

✨️ பாதாம் – 10

✨️ பசும் பால் – ஒரு கிளாஸ்

✨️ தேன் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

👉 முதலில், ஒரு பாத்திரத்தில் பத்து பாதாம் பருப்பை தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்கவும்.

👉 பின்னர் பாதாம் பருப்பை தோல் உரித்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

👉 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி நன்றாக காய்ச்சவும்.

👉 பின்னர் அதில் பாதாம் விழுதைச் சேர்த்து கலக்கவும்.


👉 இந்த பாதாம் பாலை ஒரு கிளாஸில் ஊற்றி அதனுடன் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

👉 பாதாம் பால் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

👉 பாதாம் பொடி சாப்பிடுவது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:-

✨️ பாதாம் – 10

✨️ வால்நட்ஸ் – 10

✨️ பசும்பால் பால் – ஒரு கிளாஸ்

✨️ பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

👉 முதலில் பத்து பாதாம் மற்றும் வால்நட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

👉 பின்னர், அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்கவும்.

👉 பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு டம்ளர் பசும்பாலை ஊற்றி சூடாக்கவும்.

👉 அதன் பிறகு, அதில் அரைத்த பொடியைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

👉 இந்தப் பாலுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பாதாம் பருப்பின் நன்மைகள்:

🔶️ நினைவாற்றல் அதிகரிக்கும்

🔶️ கொலஸ்ட்ராலை குறைக்கும்

🔶️ இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

🔶️ எடை இழப்பை ஊக்குவிக்கும்

🔶️ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

🔶️ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

🔶️ செரிமானத்தையும் மேம்படுத்தும்

🔶️ முடி நன்றாக வளரும்

🔶️ நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும்