லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நீ சூன் தொகுதி எம்.பி.க்கள் லூயிஸ் இங் மற்றும் கேரி டான் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

யிஷுன் ரிங் ரோட்டில், இன்று ஏப்ரல் 22 பிளாக் 846 இல் நடந்த ஊடக நேர்காணலில் இருவரும் தங்களது ஓய்வை அறிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு சிறந்த பயணமாக அமைந்தது என்று திருவாட்டி கேரி டான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீ சூன் சவுத்தின் குடியிருப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் ஒரு சிறந்த உறவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக அவர் கூறினார்.

பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு, குழந்தைகளுக்கான விரிவான கல்வி மற்றும் உள்ளடக்கிய சமூகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக திருவாட்டி டான் கூறினார்.

எதிர்காலத்தில் தான் எந்தப் பணியை மேற்கொண்டாலும், சிங்கப்பூரர்களின் நலனுக்காக நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தொடர்ந்து பாடுபடுவேன் என்று திருவாட்டி டான் கூறினார்.