25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார்.

ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது.

சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,
புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி தடுமாறி 7 வது மாடியில் உள்ள தல மேடையில் விழுந்துள்ளார்.

வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்த சிறுமியை இரவு உணவிற்கு அழைக்க அவரது தந்தை அறைக்குச் சென்றார்.

அப்போது தனது மகளைக் காணவில்லை என்று பீதியடைந்த அவர், உடனடியாக அலுவலகத்தில் இருந்த தனது மனைவிக்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர் சிறுமி 7வது மாடியில் விழுந்து கிடப்பதைக் கண்டனர்.

சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சுற்றியுள்ள பகுதியில் இருந்த மருத்துவமனைகள் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததை அடுத்து, அவர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தாய் கூறினார்.

சிறுமியின் கைகள் மற்றும் முதுகுத்தண்டில் எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டது.

சிறுமிக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan