இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா...பெண்களா..???

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுகின்றனர்.ஆண்களும் வேலைக்குச் செல்லும் மனைவிமார்களுக்காக வீட்டில் சிறிது வேலைகளை செய்து வைக்கிறார்கள்.இன்றைய அவசர உலகில் இப்படி இருவரும் வேலையை சரிபாதியாக பிரித்து குடும்பத்திற்காக உழைக்கின்றனர்.
இப்படி இருக்கையில் இருவரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.ஆரோக்கியமான உணவு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டும் போதுமா நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டாமா..??
ஆம்.. சமீபத்திய ஆய்வு தரவு ஒன்று ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்வதாக தெரிவிக்கின்றன.
அந்த வகையில் அமெரிக்காவில் பெண்களின் ஆயுட்காலம் 80 ஆண்டுகள் என்றும், ஆண்களின் ஆயுட்காலம் 75 ஆண்டுகள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இதனை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யு.எஸ்.சி லியோனார்ட் டேவிஸ் ஸ்கூல் ஆஃப் ஜெரண்டாலஜியின் உதவிப் பேராசிரியர் ஒருவர் இந்தக் கண்டுபிடிப்பு குறித்து அறிக்கை அளித்தார்.
ஆனால் அதில் எத்தனை ஆண்டுகள் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு பெண்கள் ஆண்களை விட குறைவான ஆரோக்கியமான ஆயுட்காலத்தில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பெண்கள் வயதான காலத்தில் ஆண்களை விட உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள்.
பெண்கள், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு, டிமென்ஷியா மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெண்களின் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும் காரணிகள் எவை..???
1) மரபியல்
ஒரு பெண்ணின் XX குரோமோசோம்கள் நீண்ட ஆயுளைப் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.ஆனால் அது எப்படி என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2) ஹார்மோன்கள்
ஈஸ்ட்ரோஜன் சுரப்பிக்கும் ஆயுளுக்கும் தொடர்புடையதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருப்பதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் ஆண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களை விட பலவீனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இது அவர்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனவே ஆண்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan