மே மாதம் 28-ஆம் தேதி உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிற்பகல் 3.15 மணியளவில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றைச் சோதனை செய்தனர்.
சோதனையில் உரிமம் பெறாத, ஆபத்தான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
40 வயதுடைய நபர் மற்றும் அவருடன் இருந்த 31 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரில் 10 மின்-சிகரெட்டுகள்,10 குறுந்தடிகள், Stun கருவிகள்,5 சிகரெட் பொட்டலங்கள் என உரிமம் பெறாத, ஆபத்தான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
குடிநுழைவு சோதனை சாவடி அதிகாரிகள் இச்சம்பவத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது.
காவல்துறை அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபத்தான ஆயுதங்கள், துப்பாக்கிகள், நச்சு வாயுக்கள், வெடி பொருட்கள் போன்றவற்றைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வருவது குற்றம் என்பதைக் காவல்துறை சுட்டிக்காட்டியது.
இத்தகைய பொருட்களைக் கொண்டுவருவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கக்கூடும்.