மாஸ் ஹிட்..!!! தக் லைஃப் படத்தின் முதல் பாடலே சும்மா தெறிக்க விடுது…!!!

மாஸ் ஹிட்..!!! தக் லைஃப் படத்தின் முதல் பாடலே சும்மா தெறிக்க விடுது...!!!

பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் தக் லைஃப். இந்தப் படம் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவானது. இந்தப் படத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி ஃபசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ நேற்று வெளியிடப்பட்டது.

இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலின் சிறப்பம்சம் கமல் மற்றும் சிம்புவின் நடனக் காட்சிகள் தான்.இந்தப் பாடல் வெளியான ஒரே நாளில் யூடியூப்பில் 17 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர்.