2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!!

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு...!!!

சிங்கப்பூர்: 2025 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகை S$13,500 ஆகும்.

இந்தத் தகவலை தேர்தல்துறை வெளியிட்டுள்ளது.

அது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவுக்குச் சமம்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

கடந்த மாதம் (மார்ச்) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 13,750 வெள்ளி ஆகும்.

நாடாளுமன்றச் சட்டத்தின்படி, தேர்தல் வைப்புத்தொகை அதற்கு நிகரான முழு தொகையாக இருக்க வேண்டும்.

2020 பொதுத் தேர்தலின் போது கூட, வைப்புத்தொகை $13,500 மட்டுமே.

வேட்பாளர் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதற்கு செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 12.5 சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

வேட்பாளர் 12.5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தால் அவர் வைப்புத் தொகையை திரும்ப பெற இயலாது.