சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!!

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!!

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேரைக் கடலோரக் காவல்படை கைது செய்தது.

ஏப்ரல் 19 ஆம் தேதி (நேற்று) பிற்பகல் 2.05 மணியளவில் அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் பார்த்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

அதிகாரிகள் சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள Pulau Sarimbun தீவு அருகே சோதனை நடத்தி கொண்டிருந்தனர் .அப்போது கடலில் இருந்த படகை நோக்கி அதிகாரிகள் சென்றனர்.அது மலேசியாவை நோக்கி சென்றது.

அந்த படகை நோக்கி அதிகாரிகள் பின் தொடர்ந்தனர்.அதிகாரிகள் பின் தொடர்வதை அறிந்த படகில் இருந்த இருவர் கடலில் விழுந்ததாகவும் மீண்டும் ஏறி அமர்ந்ததாகவும் கூறப்பட்டது.

கடலோரக் காவல்படைப் படகின் மீது படகு இருமுறை மோதியது.

கடலோர காவல்படை அதிகாரி ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

படகு பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 28 வயது முதல் 47 வயது வரை உள்ளவர்கள்.

காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan