60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் இந்த மாதம் 5-ஆம் தேதி முதல் Healthier SG திட்டத்திற்கு பதிந்துகொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு பதிந்து கொள்ள குறுஞ்செய்தி மூலம் சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 900 க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பங்கேற்பதற்காக பொது மருந்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டம் மூலம் குடும்ப மருத்துவர் தனிநபர் நியமித்துக் கொள்ளலாம்.
மருத்துவர் அணுகும் போது இலவச பரிசோதனைகள், தடுப்பூசி சேவைகள் உள்ளிட்டவைகளும் இடம்பெறலாம்.
அதோடு அவர்கள் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, சுகாதார மேம்பாட்டு வாரியம், மக்கள் கழகம், Sport SG அமைப்பு ஆகியவற்றின் திட்டங்களிலும் சேர்ந்து கொள்ளலாம்.
மூத்தோருக்கான பதிவை தொடர்ந்து, Healthier SG திட்டம் 40 முதல் 59 வயதுடைய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
Healthier SG திட்டத்தில் சேர்வதற்கு ஊழியர்களை ஊக்குவிக்குமாறு முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிங்கப்பூரில் வசிக்கும் 40 வயது அல்லது அதற்கு அதிகமான 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் 2024-ஆம் ஆண்டுக்குள் Healthier SG திட்டம் மூலம் பலன் பெறுவர் என்று கூறப்படுகிறது.