விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!!

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்...!!!

அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பிரதேசத்தில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) புளோரிடாவிலிருந்து வந்த விமானத்தின் சக்கரம் உடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து விமானத்தில் இருந்த மெலானி கொன்சாலஸ் வார்ட்டன், தனது அனுபவத்தை குறித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

“அவ்வளவுதான் இனி கதை முடிந்தது என்று நினைத்தேன்,” என்று கூறினார்.

விமானம் அதிவேகத்தில் தரையிறங்கியதாகவும், அது சீராகச் செல்லவில்லை என்றும் வார்டன் கூறினார்.

விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர்.

விமானத்தின் சக்கரம் உடைந்தபோது, ​​அனுபவமற்ற விமானி ஒருவர் விமானத்தை ஓட்டிச் சென்றதாகத் தெரிகிறது.

பின்னர் மற்றொரு விமானி விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.