2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு...!!

சிங்கப்பூர: சிங்கப்பூரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க 18,389 பேர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2.75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 18,389
தபால் வாக்குகள் – 9,759
நேரடி வெளிநாட்டு வாக்களிப்பு – 8,630

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்கப் பதிவுசெய்தவர்களுக்கு விரைவில் மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

வாக்களிக்க விண்ணப்பித்த நபர்கள் தேர்தல் துறையின் வலைத்தளத்தைப் பார்வையிட்டு முடிவுகளைப் பார்க்கலாம்.

வாக்காளரின் தொகுதிக்கான வேட்புமனுக்கள் உறுதி செய்யப்பட்டிருந்தால், வாக்காளருக்கு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பொதுத் தேர்தலில் மொத்தம் 10 வெளிநாட்டு வாக்குச் சாவடிகள் இருப்பதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,கான்பெரா,துபாய்,லண்டன்,நியூயார்க், துபாய்,சான் பிரான்சிஸ்கோ,ஷாங்காய்,டோக்கியோ, வாஷிங்டன்,ஹாங்காங் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.