என்ன …பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!!

என்ன ...பிரியங்காவிற்கு இது 3 வது திருமணமா..??? பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் பேட்டி..!!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா தேஷ் பாண்டே ஏற்கனவே பிரவீனை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.

இந்தச் சூழலில்தான் டிஜே வசி என்பவரை தற்போது இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். 32 வயதான பிரியங்கா, தன்னை விட 10 வயது மூத்தவரான 42 வயது டிஜே வசியை மணந்துள்ளார். வசி ஒரு தொழில்முறை டிஜேவாகப் பணிபுரிகிறார். அவர் பல நிறுவனங்கள் மற்றும் பப்களில் டிஜேவாகப் பணியாற்றியுள்ளார்.மேலும் அவர் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பிரியங்காவும் டிஜே வசியும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அவர்கள் நண்பர்களாகி, அது காதலாக மாறியது. பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், இது பிரியங்காவின் இரண்டாவது திருமணம் அல்ல, மூன்றாவது திருமணம் என்று பைல்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, பிரவீன் மற்றும் டிஜே வசி உட்பட இரண்டு பேரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், பிரியங்கா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தேஷ்பாண்டே என்ற பெயரைக் கேட்டாலே, அவர் ஒரு வட இந்தியப் பெண் என்பது நமக்குத் தெரியும்.

பிரியங்கா அவர் தாய்க்கு செல்ல பிள்ளை அவர் என்ன சொன்னாலும் கேட்பார். பிரியங்கா விஜய் டிவியில் பணிபுரியும் போது, ​​அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சாதிக் என்ற முஸ்லிம் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிந்தனர்.

பிரியங்கா நுட்பமாக சிரித்துக் கொண்டே விஷ ஊசி போடுவதில் திறமையானவர்.மேலும் சிண்டு மூட்டுவதிலும் திறமையானவர் என்று கூறினார். நான் பிரியங்காவை இரண்டு அல்லது மூன்று முறை நேரில் சந்தித்திருக்கிறேன்.அவர் கொஞ்சம் குசும்புத்தனமான பார்ட்டி என்பதால் அவரை குசும்புத்தனமாகவே அணுகினேன்.

அவர் ஒரு அடி எடுத்து வைத்தால், நான் பத்து அடி எடுத்து வைப்பேன். ஒருமுறை அவர், “என்னைப் பற்றி ஏதாவது கிசுகிசு இருந்தால், சொல்லுங்கள்” என்று கேட்டார். பிறகு நான் அவரது திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். அவர் உடனடியாக, “போதும், என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு வெளியேறினார் என்று அவர் அந்த நேர்காணலில் கூறினார்.