சிங்கப்பூரில் உயரமான கட்டிடங்களில் இருந்து குப்பைகளை வீசுவது சட்டவிரோதமான செயல்.
வீசப்படும் குப்பை பொது இடத்தில் வீசப்பட்டிருந்தால் உரிமையாளர் அல்லது வாடகைக்கு வசிப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இத்தகைய செயல்களை அவர்கள் குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்கள்.
இது போன்ற செயல்களைத் தடுப்பதும் அவர்கள் பொறுப்பாகும்.
அந்த தகவல்களைத் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைப்பு முதலில்,குப்பை வீட்டிலிருந்து கொட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இளம் பிள்ளைகள் ,வயதானவர்கள் ,மனநலம் பாதிக்கப்பட்டோர் ,உடற்ஊனமுற்றோர் குப்பையை வீசி உள்ளார்கள் என்றால் அவர்களைத் தேசிய சுற்றுப்புற அமைப்பு கவனத்துடன் கையாள வேண்டும் .
குப்பை வீசப்பட்ட சமயத்தில் உரிமையாளர் அல்லது வாடகைக்கு வசிப்பவர் வீட்டில் இல்லை என்பதை நிரூபித்தால் அவர்மீது குற்றம் சாட்டப்படுவதை அவர் மறுக்கலாம்.
14 நாட்களுக்குள் யார் குப்பையை வீசினார்கள் என்பதைத் தெரிவித்து, அவர்மீது சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டை மறுக்கலாம்.
இத்தகைய செயலைச் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
முதல்முறை குற்றம் செய்பவருக்கு $2000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
இடண்டாவது முறை குற்றம் புரிவோருக்கு $4,000 வெள்ளி விதிக்கப்படலாம்.
மூன்றாவது முறை குற்றம் செய்பவருக்கு $10,000 விதிக்கக்கூடும் .
அதோடு சீர்த்திருத்த வேலைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.அவர்கள் சீர்த்திருத்த வேலையை 12 மணி நேரம் செய்ய வேண்டும் என்றும் விதிக்கப்படும் .