சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு குறித்து பேசிய அமெரிக்கா..!!!

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்று அவர் கூறினார்.

அதுவரை டிக்டோக் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதாக திரு. டிரம்ப் கூறினார்.

இதற்கிடையில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெள்ளை மாளிகையில் திரு. டிரம்பை சந்தித்தார்.

இருவரும் வர்த்தக வரிகள் குறித்து விவாதித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரிகள் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்படும் என்று திரு. டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஐரோப்பிய பொருட்களுக்கும் 20 சதவீத வரியை திரு. டிரம்ப் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில், இரு தலைவர்களும் குடிநுழைவு,வரிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.