Singapore Job News Online

டிரைவர் வேலைக்கு இவ்வளவு சம்பளமா!

அடுத்த மாதத்திலிருந்து ஆண்டுதோறும் துப்புரவு துறையின் கழிவு லாரி ஓட்டுநர்களின் சம்பளம் 210 வெள்ளி உயர்த்தப்படும்.

சம்பள உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

அது சாத்தியமானத்துக்கு கட்டங்கட்டமாக உயரும் சம்பள முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் சாத்தியமானது.

அதே நேரத்தில் கழிவு மேலாண்மை துறையில் படிப்படியாக அதிகரித்து வரும் சம்பள முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் சுமார் 3000 ஊழியர்கள் பயன்பெறுவர். அவர்களில் அந்த துறையில் புதிதாக சேர்வோரும் அடங்குவர்.

தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 2,200 வெள்ளி.

அவர்கள் கிட்டத்தட்ட 3,600 வெள்ளிக்கு மேல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சம்பளமாக பெறுவர்.

கழிவு நிர்வாக நிறுவனமான `Junk to Clear´ இது போன்ற உயரும் ஊழியர்களின் செலவைச் சமாளிக்க அதிக செயல்திறன் தேவை என்றது.

நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் எந்தெந்த பொருட்களை வீச வேண்டும், எவ்வளவு பேர் தேவை மற்றும் எந்த வகையான வாகனம் பதிவு செய்யப்படும் என்பதைப் பற்றி ஆலோசித்து திட்டமிடுகிறது.