சிங்கப்பூருக்கு S Pass, E Pass, NTS Permit ஆகிய பாஸ்களில் செல்வதற்கு RMI or AVANZ certificate கட்டாயமா?

சிங்கப்பூருக்கு S PASS ,E PASS , NTS PERMIT ஆகிய பாஸ்களில் செல்வதற்கு RMI அல்லது AVANZ certificate கட்டாயமா? அதற்கு எவ்வளவு செலவாகும்? RMI அல்லது AVANZ இதில் எது சிறந்தது? தற்போதைய நிலவரம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் இப்பதிவில் தெளிவாக காண்போம்.
சிங்கப்பூருக்கு செல்ல பல பாஸ்கள் உள்ளன.S PASS ,E PASS , NTS PERMIT இல் செல்வதற்கு நீங்கள் படித்திருக்க வேண்டும்.இது போன்ற பாஸ்களில் ஹோட்டலில் மாஸ்டர் வேலை வாய்ப்பு தவிர மற்ற வேலைகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.இதற்குமுன் டிகிரி முடித்திருந்தால் நீங்கள் அப்ளை செய்ய முடியும். ஆனால் தற்போது RMI அல்லது AVANZ certificate கேட்கிறார்கள்.ஒரு சில வேலைகளுக்கு RMI மட்டும் கேட்கிறார்கள்.இன்னும் ஒரு சில வேலைகளுக்கு RMI அல்லது AVANZ certificate கேட்கிறார்கள்.
RMI அல்லது AVANZ என்றால் என்ன?
நீங்கள் படித்து முடித்ததற்கான செர்டிபிகேட்கள் உண்மையானதா? போலியானதா? என்பதை சிங்கப்பூரால் சரிபார்த்து கொடுக்கப்படும் verification certificate. நீங்கள் சமர்ப்பித்த செர்டிபிகேட்களை அங்கிருக்கும் காலேஜ் சரிபார்த்து அது உண்மையானதாக இருந்தால் மட்டுமே RMI அல்லது AVANZ certificate வழங்கும்.
RMI அல்லது AVANZ certificate கட்டாயமா?
இதற்குமுன் அனைத்து வேலைகளுக்கும் RMI அல்லது AVANZ certificate கேட்கவில்லை. ஆனால் தற்போது அப்படியில்லை.சுமார் 10 வேலைகள் வந்தால் அதில் 9 வேலைகளுக்கு RMI அல்லது AVANZ certificate கேட்கிறார்கள்.இதனால் RMI அல்லது AVANZ certificate வைத்திருப்பது கட்டாயம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது.
RMI அல்லது AVANZ செர்டிபிகேட்டை கம்பெனி கேட்கிறதா? அல்லது ஏஜென்ட்களே உருவாக்கினார்களா?
கம்பெனிகளும் கேட்கிறார்கள்.ஆனால் அதில் ஏஜென்ட்களுக்கும் பங்கு உள்ளது.TEP பாஸில் சென்றவர்களில் சிலர் போலி செர்டிபிகேட்களை சமர்ப்பித்து சென்றுள்ளனர்.அது போலி என்று தெரிந்ததும்.அவர்களை தடை செய்து திருப்பி அனுப்பி விட்டனர். நீங்கள் RMI அல்லது AVANZ செர்டிபிகேட்டை சமர்ப்பித்தால் உங்களுடைய செர்டிபிகேட்கள் உண்மையானது என்று தெரிந்து விடும் . ஒரு சில ஏஜென்ட்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.நீங்கள் டிகிரி முடித்திருந்தால் RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள்.அதோடு வேலை வாய்ப்பும் இருக்கிறதாக கூறுவார்கள்.அதற்கென கமிஷன் வைத்து பணம் கேட்பார்கள். ஆனால் நீங்கள் RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுத்த பிறகு அந்த வேலை வாய்ப்பு இருப்பது கேள்விக்குறியே.தற்போது வரும் வேலை வாய்ப்புகள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள் முடிந்து விடுகிறது.
RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுப்பதற்கு குறைந்தது 10 முதல் 15 நாட்கள் ஆகும்.RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுப்பதற்கு ஏஜென்ட்கள் மூலம் எடுப்பதற்கு 10000 முதல் 15000 வரை கேட்பார்கள் . இதே நீங்கள் நேரடியாக அப்ளை செய்தால் $100 முதல் $170 வெள்ளி வரை செலவாகும்.
ஏஜென்ட்கள் RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுப்பதற்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள் என்றால் நேரடியாக அப்ளை செய்ய முடியுமா?
நீங்கள் நேரடியாக அப்ளை செய்ய முடியும்.ஆனால் உங்களால் சரியாக விண்ணபிக்க முடியும் என்றால் மட்டுமே அப்ளை செய்யுங்கள்.ஏனென்றால் நீங்கள் அப்ளை செய்யும் போது ஏதேனும் ஓர் பிழை இருந்தால் நீங்கள் படித்த பள்ளி,காலேஜ் லிருந்து செர்டிபிகேட் பெற்று மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறப்படும்.RMI அல்லது AVANZ செர்டிபிகேட் கிடைப்பதற்கு காலதாமதமாகலாம் .
RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுப்பதற்கு ஏஜென்ட்கள் மூலம் நீங்கள் முயற்சி செய்தால் ஒரு ஏஜென்ட்டிடம் மட்டும் கேட்காமல் கூடுதலாக இரண்டு ,மூன்று ஏஜென்ட்களிடம் RMI அல்லது AVANZ செர்டிபிகேட் எடுப்பதற்கான கட்டணத்தை விசாரித்து ஒப்பிட்டு பாருங்கள்.அவர்களில் யார் சரியான முறையில் எடுத்து கொடுப்பார்களா அவரர்களிடம் அப்ளை செய்யுங்கள்.ஒரு சிலர் குறைவான பணம் பெற்றாலும் சரியான முறையில் செய்து கொடுப்பதில்லை.அதிகமான பணம் பெற்றாலும் சரியான முறையில் எடுத்து கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.யார் சரியான முறையில் செய்து கொடுக்கிறார்களோ அவர்களிடமே முயற்சி செய்யுங்கள்.
RMI அல்லது AVANZ செர்டிபிகேட் இல்லாவிட்டால் சிங்கப்பூர் செல்ல முடியாதா?
RMI அல்லது AVANZ செர்டிபிகேட் இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் செல்ல முடியும்.RMI அல்லது AVANZ செர்டிபிகேட் கேட்காத வேலை வாய்ப்புகளும் வருகிறது.உங்களிடம் அந்த வேலை வாய்ப்புக்கான அனுபவம்,டிகிரி இருந்தால் அப்ளை செய்யலாம்.
RMI அல்லது AVANZ செர்டிபிகேட் சரியான முறையில் எடுக்க வேண்டுமா?
7558112958 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்கள் கேட்கும் செர்டிபிகேட்களை நீங்கள் அனுப்பினால் உங்களுக்கு சரியான முறையில் எடுத்து கொடுப்பார்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan