Latest Tamil News Online

சிங்கப்பூர் மக்களே எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருங்கள்!

சிங்கப்பூரில் தோ பாயோவில் 3-ஆவது வாரமாக டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

தேசிய சுற்றுப்புற அமைப்பு கொசுக்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தோ பாயோவில் கொசுக்கள் பரவக் கூடிய 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.அங்கு வசிப்பவர்களை மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்

கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 52 பேருக்கு பிளாக் 149 இல் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

சிங்கப்பூர் முழுவதும் பதிவான அதிக எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது.

தோ பாயோவில் ஜூன் 27-ஆம் தேதி நிலவரப்படி டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் மேலும் 6 குழுமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அவைகள் லோரோங் 1,1A,2 (Lorong 1,1A, 2) ஆகியவற்றில் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில் ஓர் இடத்தில் சுமார் 187 டெங்கு பாதிப்பு வசிப்பவர்கள்,ஊழியர்கள் உள்ளிட்ட வட்டாரவாசிகளிடையே அதிகமாக பதிவாகி உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் வரை வெப்பம் அதிகரிக்கலாம் அதனால் டெங்கு பாதிப்பும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் Aedes (ஏடீஸ்) கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்க அனைவரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.