மத்திய சேமநிதிக் கழக உறுப்பினர்கள் Singpass மூலம் தங்கள் கணக்குள் நுழைய இனி முக அடையாளத்தைப் பயன்படுத்த வேண்டிருக்கும்.
கணினி மென்பொருள் மோசடி கும்பல் CPF சேமிப்புத் தொகையை குறிவைப்பதால் அதனைத் தடுக்க இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேமநிதி கழகம்,GovTech, சிங்கப்பூர் காவல்துறை ஆகியவை அது பற்றிய கூட்டறிக்கை வெளியிட்டன.
இவ்வாண்டின் 6 மாதங்களில் கணினி மென்பொருள் சமந்தப்பட்ட 700 மோசடி புகார்கள் வந்துள்ளன.
சுமார் 8 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 8 மோசடிகள் சேமநிதி சேமிப்புத் டெபாசிட் சமந்தப்பட்டவை.
அதனால் 124,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற மோசடி சம்பவங்கள் நடப்பதால் அதனை கருத்தில் கொண்டு இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும்,சேமநிதி கழக உறுப்பினர்கள் பாதுகாப்புக்கான அவசியத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.