ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!!

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க...!!

உடல் எடையைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இன்று நடிகர்கள், நடிகைகள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் விரைவாக உடல் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.அப்படி கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

கடுமையான உடற்பயிற்சியினால் ஏற்படும் பாதிப்புகள்:

👉 அதிகப்படியான சோர்வு

👉 ஹார்மோன் சமநிலையில் மாற்றம்

👉 உடல் செயல்திறன் குறைவு

👉 காயங்கள் மற்றும் வீக்கம்

👉 முதுகுவலி

👉 பக்கவாதம்

👉 மாரடைப்பு

👉 மூட்டு வலி

👉 தூக்கமின்மை

போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.இதனால் சோர்வு, மனவலிமை மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதய நோய் உள்ளவர்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது அதிக எடையைத் தூக்குவது நரம்பு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளுவது நல்லது என்றாலும், அதை அதிக நேரம் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. எனவே ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சிலர் விரைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முட்டை, பருப்பு வகைகள் போன்ற அதிக புரத உணவுகளை உட்கொள்கிறார்கள். புரதத்திற்காக மட்டுமே அதிக புரத உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

எனவே ஜிம்மிற்கு செல்பவர்கள் சரியான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.