ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!!

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்...!!!

ஜன்னல் ஓரத்தில் இருந்து கீழே விழவிருந்த சிறுவனை காப்பாற்றிய ஒருவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள தாமான் புத்ர பர்தானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடி ஜன்னலில் ஒரு சிறுவன் தொங்குவதை காட்டும் காணொளி ஆனது இணையத்தில் பரவலாகப் பகிரிடப்பட்டது

கீழ் தளங்களில் ஜன்னலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த வேலியின் மீது ஏறி ஒருவர் சிறுவனை காப்பாற்றுகிறார்.

பின்னர் அவர் சிறுவனை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் இழுக்கிறார்.

இதில் சிறுவனுக்கு காயம் இதுவும் ஏற்படவில்லை.

சிறுவனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அவர் துணிந்து சிறுவனை காப்பாற்றிய செயல் நெட்டிசன்களால் பாராட்டப்படுகிறது.

அவர் ஒரு ஸ்பைடர் மேன் போல ஏறியதாக நெட்டிசன்கள் வருணித்தனர்.

சிறுவன் பாதுகாப்பாக இருந்ததைக் கண்டு சிலர் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.

குழந்தைகள் ஜன்னல்களில் இருந்து கீழே விழுவதைத் தடுக்க பாதுகாப்பான தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று சிலர் கூறினர்.