சிங்கப்பூரில் ஜனவரி முதல் ஜூன் வரை 700 க்கும் மேற்பட்ட கணினி மென்பொருள் மோசடி குறித்த புகார்கள் பதிவாகி உள்ளன.
அது பற்றிய கூட்டறிக்கையை மத்திய சேமநிதிக் கழகம்,GovTech அமைப்பு,சிங்கப்பூர் காவல்துறை ஆகியவை இணைந்து வெளியிட்டது.
ஏறக்குறைய 8 மில்லியன் வெள்ளியை கணினி மென்பொருள் மோசடியில் இழந்துள்ளனர்.
இந்த மோசடி சம்பவங்களில் 8 மோசடிகள் மத்திய சேமநிதிச் சேமிப்பு சமந்தப்பட்டவை.
கணினி மோசடி சம்பவங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் அதிகமாக நடக்கிறது.
Facebook போன்ற சமூக ஊடகங்களில் மலிவான பொருட்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
அனுமதி பெறாத ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்டைப் பதிவிறக்கம் செய்யும்மாறு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பு கேட்கிறது.
இணைத்தப்பின்,மோசடிகள் நடைபெறுகிறது.
முறையான அனுமதி பெறாத ஆப்களை(Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தீவு முழுவதும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவும், காவல்துறை வேவுப் பிரிவு மோசடி சம்பவங்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகளை நடத்தியது. அதில் 9 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பெண்.16 வயதுக்கு உட்பட்ட இளைஞரும் ஒருவர்.
மேலும் 2 பெண்கள் மற்றும் ஓர் ஆடவரும் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.