சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பழைய ரயில் இருக்கைகள் முதியோருக்கான நாற்காலிகளாக மாற்றப்படுகின்றன.
தெம்பனிஸ் நகர சபை மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
216 ரயில் இருக்கைகள் முதியவர்கள் பயனடையும் வகையில் நடைபாதைகள், பயணிகள் இறங்குதளங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத் தொகுதிகளின் கீழ் வைக்கப்படும்.
இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயதானவர்கள் மற்றும் நடமாடுவதில் சிரமம் உள்ளவர்கள் உட்கார்ந்து ஓய்வெடுக்க ஒரு இடத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த திட்டம் குறித்து தெம்பனிஸ் நகர சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்தத் திட்டத்தை நேற்று தெம்பனிஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சூ பெய் ஹெங் மற்றும் SMRT தலைவர் சிம் வெய் மிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan