மூன்று ஆண்டுகளாக இடைவிடாத முன்னேற்றத்தால் , உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில் 6-ஆவது இடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது.
163 நாடுகளிலும் பிரதேசங்களிலும் அமைதியின் அளவை அனைத்துலக அமைதி குறியீடு மதிப்பிடுகிறது.
நாடுகளின் சராசரி அமைதி அளவீட்டின் சதவீதம் குறைந்திருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அது 0.42 சதவீதம் குறைந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணமாக உக்ரைன் படையெடுப்பு என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும்,ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் கடந்த ஆண்டு சிறிய பதிவாகி இருப்பதாக கூறியது.சிங்கப்பூருக்கு அதில் இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது.
உலக அளவில் பாதுகாப்பைப் பொறுத்தவரை 4-ஆவது இடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது.
உலகின் மிக அமைதியான நாடு என்ற பெயரை Iceland தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.