Singapore Breaking News in Tamil

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!அவதி படும் மக்கள்! மற்றொருபுறம் சுட்டெரிக்கும் வெயில்!

அண்மையில் சீனாவின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்தது. அதனால் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அதோடு விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின.போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்படுகின்றனர்.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் Hunan ஒன்று.

வெள்ளத்தால் கிட்டத்தட்ட 900 பேர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Guangxi வட்டாரத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

20 சென்டிமீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளது.

இந்த பெரு மழையால் Guangdog, Zhejiang, Shanghai ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் மண்சரிவுகளும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

வட சீனாவில் அதற்கு மாறாக வானிலை இருக்கிறது.மக்களால் தாங்க முடியாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது.

கடந்த வார இறுதியில் Beijing உள்ளிட்ட சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

வெப்பநிலை Beijing இல் விரைவில் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அது மீண்டும் உயரக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.