Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் இந்த தவறைச் செய்தால் கட்டாயம் பிரம்படி கிடைக்கும்!

சிங்கப்பூரில் ஜூன் 25-ஆம் தேதி கடன்தொந்தரவு குறித்து காவல்துறைக்கு புகார் வந்தது.

Geylang East Avenue 1 -இல் உள்ள வீடு ஒன்றில் கடன்தொந்தரவு சம்பவம் நடந்துள்ளது.

அந்த வீட்டின் சுவர்களைச் சேதப்படுத்தி உள்ளனர். அதோடு வாசல் கதவின் பூட்டில் ஏதோ திரவத்தையும் தடவி,எச்சரிக்கை கடிதத்தையும் விட்டு சென்றுள்ளதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தினர்.கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அதில் 38 வயதுடைய நபர் அடையாளம் காணப்பட்டார். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று (ஜூன் 27) அவர்மீது கடன் கொடுப்போர் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படும்.

கடன்தொல்லை தொடர்பான சம்பவங்களில் முதல்முறை குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5,000 வெள்ளி அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் 5 ஆண்டுகள் கட்டாய சிறைத் தண்டனையும் ,6 கட்டாய பிரம்படிகளும் விதிக்கப்படும்.

கடன் தொந்தரவு போன்ற சம்பவங்களுக்கு அனுசரணை காட்டப்பட மாட்டாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகவும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.

கடன்முதலைகளிடமிருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.