சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மனோகர் என்ற நபர் மதுபோதையில் ஒருவர் காதை கடித்து குதறினார். இச்சம்பவம் 2020-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்தது.
தகாத வார்த்தைகளால் அருகில் இருந்தவரை சங்கர் திட்ட ஆரம்பித்துள்ளார்.
திட்டுவதை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால், அதனை சங்கர் பொருட்படுத்தவில்லை.
அந்த நபரின் இடது காதை சங்கர் கடித்து குதறினார்.
அந்த நபருக்கு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.
அவருக்கு மறுநாளும் காது வலி இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றார்.
இடது காதில் சுமார் 2 செண்டிமீட்டர் நீளமுள்ள பகுதியை கடித்து துப்பி இருப்பதாக தெரிய வந்தது.
அவரின் காயத்தை ஆற்றவும்,தையல் போடவும் சிகிச்சை தேவைப்பட்டது.
வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.
அவருக்கு 5 மாதச் சிறைத்தண்டனை,1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.