பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!!

பயணிகளின் கவனத்திற்கு📢...!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.

பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பொதுமக்கள் புனித வெள்ளி மற்றும் தொழிலாளர் தினத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை:

🔴 புனித வெள்ளிக்கு முதல் நாள் இரவு – ஏப்ரல் 17

🔴 தொழிலாளர் தினத்திற்கு முந்தைய
நாள் இரவு – ஏப்ரல் 30

ஆகிய இரு தினங்களும் நள்ளிரவுக்குப் பிறகு பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தில் பயணிக்க முடியும் என்று SMRT தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரயில் சேவை:

சிட்டி ஹால் ஸ்டேஷனில் இருந்து மரினா சவுத் பியர்,ஜூராங் ஈஸ்ட்,பாசிர் ரிஸ்,துவாஸ் லிங்கிற்கான கடைசி ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவா சூ காங்கிற்கான கடைசி பேருந்து 300, 301, 302, 307, 983A ஆகியவை அதிகாலை 1.40 மணிக்கு புறப்படும்.

மேலும் உட்லேண்ட்ஸ் மற்றும் புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து சில பேருந்துகள் அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும்.

பூன் லேயிலிருந்து கடைசி பேருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலை அறிய பொதுமக்கள் SMRT ஃபேஸ்புக் பக்கத்தை அணுகலாம்.