டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு...!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்...!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன.

ஜப்பான்:

நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

அமெரிக்கா:

⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது.

⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும்.

இந்நிலையில் மிக அதிக வரிகளை எதிர்கொண்ட வியட்நாமின் பங்குகள் 6.5 சதவீதம் உயர்ந்தன.

தைபேயின் 9.3 சதவீத உயர்வானது அதன் மிகப்பெரிய சாதனை உயர்வாக பார்க்கப்படுகிறது.

சிட்னி மற்றும் ஜகார்த்தாவின் பங்குகளும் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

திரு. டிரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு எண்ணெய் விலைகளும் சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளன.

அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்துள்ளது.