இனி உடற்குறையுள்ளவர்களும் கயாக் படகோட்டத்தில் ஈடுபட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிடோக் நீர்த்தேக்கத்தில் Passion Wave நீர் விளையாட்டு நிலையம் புதுப்பிக்கப்பட்டு நீச்சல் பிரபலம் Yip Pin Xiu வும்,கலாசார, சமூக,இளையர் துறை அமைச்சகத்தின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் Eric Chua வும் திறந்து வைத்தனர்.அது உடற்குறையுள்ளவர்கள் கயாக் படக்கோட்டத்தில் ஈடுபட வகைச்செய்யும்.
கயாக் படக்கோட்டத்தில் சக்கர நாற்காலியில் உள்ளவர்களும் தடையின்றி ஈடுபடலாம்.
சாய்வுத்தளம்,கயாக் படகுகள் புதிய முறையில் இருக்கிறது. அவைகள் நீரில் இறக்கப்படும் மேடைக்கு கொண்டு செல்கிறது.
எனவே,சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள் எளிதாக அணுகலாம்.
அவர்களுக்காக நீண்ட இருக்கைகளும் உள்ளது.
படகு இறக்கும் இடத்தில் கைப்பிடி கம்பிகளைப் பயன்படுத்தி படகை நீருக்குள் செலுத்தலாம்.