Singapore Breaking News in Tamil

ரஷ்யாவில் சிக்கிக் கொண்ட சிங்கப்பூரர்கள்!

ரஷ்யாவில் நிலைமை சீராக இல்லாததால் மாஸ்கோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அங்கு வசிக்கும் சிங்கப்பூரர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது.

அங்கே பாதுகாப்பு சீராக இல்லை என்று கூறியது.

மாஸ்கோவுக்கு செல்லும் சாலைகளை ரஷ்யா அரசாங்கம் மூடியுள்ளது. அதோடு பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதாகவும் சிங்கப்பூர் தூதரகம் கூறியது.

எனவே, ரஷ்யாவில் இருக்கும் அனைத்து சிங்கப்பூரர்களும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

விழிப்புடன் இருந்து உள்ளூர் செய்திகளை நுணுக்கமாக கண்காணித்து செயல்படுங்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாஸ்கோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது.